← Back to list
மாமன்னர் கவலை!
May 11, 2021
நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கைக் குறையாமல் தொடர்ந்து உயர்வாக இருப்பது குறித்து மாமன்னர் கவலை தெரிவித்திருக்கிறார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம், தனியார் துறைகள், அரசு சாரா அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் தடுப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அதோடு பல வேறுபாடுகளையும், சுயநலனையும் ஒதுக்கி வைத்து விட்டு அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கும் முன்களப் பணியாளர்களுக்கும் உதவ வேண்டும்.
Covid-19 தேசிய தடுப்பபூசித் திட்டத்தை வெற்றியடைச் செய்யும் கடப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தினார்.
மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO காலம் நெடுகிலும் அவசர, அவசியத் தேவைகளைத் தவிர்த்து அநாவசியமாக வெளியேற வேண்டாம் என்றும் வீட்டிலேயே இருக்குமாறும் அவர் ஆலோசனை கூறினார்.
நாட்டில் மருத்துவமனைகளில் இடத் தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடிகள் காணப்படுவதை அடுத்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் கொண்டு வருவதற்கான அவசியம் ஏற்பட்டது.
சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah அவ்வாறு கூறியிருக்கிறார்.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், கட்டில்கள் பற்றாக்குறை ஏற்பட்டு நிலைமை மோசமாகலாம் என அவர் கவலை தெரிவித்தார்.
"Juga kita lihat 80 peratus daripada jangkitan sekarang ni bukan di dalam kluster tetapi adalah sporadik, maksudnya sudah ada dalam komuniti dan ini yang kita bimbangkan kes mungkin akan meningkat"
நாட்டில் புதிதாக மூவாயிரத்து 973 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 328 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் 22 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.
நாளை நாடு முழுவதும் MCO அமலுக்கு வரும் நிலையில், அரசாங்கம் ஒருங்கிணைக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகள் SOPக்களை அறிவித்துள்ளது.
COVID-19 நிலவரத்தைப் பொருத்து அவ்வப்போது அவற்றில் மாற்றங்கள் செய்யப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
"Maklumat lanjut mengenai SOP-SOP yang berkaitan dengan kementerian akan dikeluarkan oleh kementerian-kementerian di dalam website masing-masing manakala SOP secara umum yang meliputi semua kementerian boleh dilihat di dalam sesawang mkn sendiri"
இதனிடையே பொதுமக்களுக்குச் சுமையாக இருக்கும் என்பதால் மூன்றாவது முறையாக அமல்படுத்தப்படும் MCOவுக்கான SOP, முதல் தடவை இருந்தது போல் இல்லை என அவர் விளக்கினார்.
நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCOவின் போது Moratorium எனும் வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைப்பது முழுமையாக இயல்பாகவே அமல்படுத்தப்படாது.
Bank Negara ஆளுனர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
மாறாக பாதிக்கப்பட்டவர்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதில் வங்கிகள் தொடர்ந்து உதவி வரும் என அவர் சொன்னார்.
வேலையை இழந்தவர்கள், வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்காக வங்கிகள் ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்ட moratorium உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூரில் தமது தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி மாநிலம் கடக்க விண்ணப்பித்த மாது ஒருவரின் செயல் அம்பலமானது.
காவல் துறை மருத்துவமனையொன்றைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அம்மாது கொடுத்த பத்திரம் போலியானது எனத் தெரிய வந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather