← Back to list
MCO 3.0: நிதி உட்பட இதர உதவிகளை அறிவிக்குமாறு கோரிக்கை!
May 11, 2021
வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்தி வைப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை அறிவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன!
நாளை தொடங்கி நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலுக்கு வருவதை அடுத்து, அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், ஏற்கனவே வழங்குவதாக அறிவித்த நிதி உதவிகளை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும் என, தேசிய முஸ்லீம் மாணவர் சங்கம் Malaysiakianiயிடம் கூறியிருக்கின்றது.
மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்பதற்கு வசதியாக ஒன்றரை லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அச்சங்கம் கோரியிருக்கின்றது.
MCO ஒரு நல்ல வாய்ப்பு!
அன்றாட வாழ்க்கையில், COVID-19 சீற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை குறைத்து, அனைவரும் வழக்கமான வாழ்க்கை திரும்பவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO விதிக்கப்பட்டுள்ளது!
இன்னும் கூறப்போனால், COVID-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு தான் இந்த MCO அமுலாக்கம் என கூறுகின்றார், மலேசிய பொது மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar.
இந்த MCO அமுலாக்கத்தினால் சிலர் பாதிக்கப்படலாம் என்ற பொதுவான ஒரு கருத்து இருந்தாலும், இச்சூழ்நிலைக்கு SOPகளை பின்பற்றத் தவறும் சில மக்களின் மெத்தனப் போக்கே காரணம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்றாரவர்.
அனைவரும் ஒத்துழைத்தால், கடந்தாண்டு முதல் MCO-வின் போது, கொரோனாப் பரவலை கட்டுப்படுத்துவதில் நமக்கு கிடைத்த அதே வெற்றி, இம்முறையும் கிடைக்கும் என Dr Zainal Ariffin நம்பிக்கை தெரிவித்தார்.
“Ini adalah penting bagi kita mengawal serta menurunkan jangkitan Covid-19 dan dengan itu langkah PKP ini akan berjaya dan kita akan keluar daripada PKP nanti dengan cemerlang sebagaimana yang telah kita lakukan semasa PKP 1.0 tahun lepas."
இந்த MCO காலக்கட்டத்தில் அனைத்து பொருளாதார துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக, பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்துள்ளார்.
இந்த MCOவின் கீழ்:
- மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்துப் பயணிக்க அனுமதி இல்லை.
- மருத்துவம், சுகாதாரம், வேலை, பொருளாதாரம், COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்வது உள்ளிட்ட அவசர மற்றும் அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பயணிக்க அனுமதி உண்டு.
- திருமணமான தம்பதிகள், தூரத்தில் வாழும் தங்களது வாழ்க்கை துணையை சந்திக்க அனுமதி உண்டு; அதற்காக, மாநிலம் கடக்க வேண்டியுள்ளவர்கள், காவல் துறையின் அனுமதிக் கடிதம் பெற வேண்டும்.
- திருமண விருந்துபசரிப்புகள், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களைத் நடத்த அனுமதி இல்லை.
- பயிற்சிகள், கருத்தரங்குகள், மாநாடு, கண்காட்சி உள்ளிட்ட நேரடி தொடர்புகள் உள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதி கிடையாது.
- வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கை நடப்புக்கு வரும்; நிர்வாகம் சார்ந்த 30 விழுக்காட்டுக்கும் மேல் போகாத தொழிலாளர்கள் மட்டுமே வேலையிடத்திற்கு நேரடியாகச் செல்ல அனுமதி உண்டு; மற்றவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும்.
- மெது ஓட்டம், சைக்கிளோட்டம் உள்ளிட்ட தொடுதல் அல்லாத உடற்பயிற்சிகளை மட்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
- இதர அனைத்து வகையான விளையாட்டு மற்றும் பொழுதுப் போக்கு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.
- அனைத்து கல்வி மையங்களும் மூடப்பட்டிருக்கும்; எனினும், அனைத்துலக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
- சிறார் காப்பகங்கள் மற்றும் பாலர் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட SOPகளை பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்; வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் சுமையை குறைப்பது அதன் நோக்கம்.
- தனிநபர் வாகனம், டெக்சி மற்றும் e-hailing சேவைகளில், ஓட்டுநர் உட்பட மூவர் மட்டுமே பயணிக்க முடியும்.
இந்த MCO ஜூன் 7ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
COVID-19: 3,807 புதிய சம்பவங்கள், 17 மரணங்கள், 19 cluster-கள்!
நாட்டில் இதுவரை பதிவான COVID-19 clusterகள் எண்ணிக்கை 448ஆக அதிகரித்துள்ளது.
நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 19 clusterகள் அதிலடங்கும் என சுகாதார அமைச்சு கூறியது.
அதில் ஏழு clusterகள் வேலையிடம் தொடர்பானவை; எஞ்சியவை, சமயம், கல்வி மற்றும் சமூக பரவல் வாயிலாக உருவானவை என அமைச்சு தெரிவித்தது.
ஆகக் கடைசியாக நாட்டில், மூவாயிரத்து 807 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.
அதில் ஆக அதிகமாக, ஆயிரத்து 149 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
மேலும் 17 பேர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
Bukit Aman: ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன!
நேற்று நாடு முழுவதும் மாநில எல்லைகளை கடக்க முயன்ற ஆயிரத்து 300க்கும் அதிகமான வாகனங்கள், வந்த வழியே திருப்பி அனுப்பட்டன.
சிலர், காவல் துறை அதிகாரிகளின் கையெழுத்தே இல்லாத அனுமதிக் கடிதங்களை வைத்துக் கொண்டு, சாலை தடுப்புச் சோதனைகளை கடந்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.
இன்னும் சிலர் வேலைக்கான அனுமதி அட்டைகளை காட்டி, மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர், சாலைத் தடுப்புச் சோதனையின் போது, காவல் துறை கண்டும் காணாமல் விட்டு விடும் என்ற நினைப்பில், மாநிலம் விட்டுப் பயணிக்க முயற்சிப்பதாக Bukit Aman தெரிவித்தது.
இப்படி யாராக இருந்தாலும் சரி, COVID-19 SOPகளை முறையாக பின்பற்றுமாறு, Bukit Aman வலியுறுத்தியிருக்கின்றது.
நேற்று தொடங்கி, நாடு முழுவதும் ஆறாயிரத்து 500க்கும் அதிகமான காவல் வீரர்களை உட்படுத்தி, 361 சாலைத் தடுப்புச் சோதனைகள் போடப்பட்டிருப்பதையும் அது நினைவுறுத்தியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather