← Back to list
தொடர்ந்து மூவாயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள்!
May 06, 2021
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூவாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது.
புதிதாக மூவாயிரத்து 551 சம்பவங்கள் உறுதிச் செய்யப்பட்டுள்ளன.
மிக அதிகமாக ஆயிரத்து 137 சம்பவங்களுடன் சிலாங்கூர் முதல் நிலையில் உள்ளது.
KL, சரவாக், பினாங்கு ஆகியவற்றிலும் அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
AstraZeneca தடுப்பூசியைப் பெறவிருப்பவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோசைச் செலுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட தேதி இடைவெளி குறைவாக இருந்தால், அது மறு அட்டவணையிடப்படும்.
தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு அவ்வாறு தெரிவித்திருக்கிறது.
பொதுமக்களிடம் இருந்து எழுந்த பல கேள்விகளைத் தொடர்ந்து அச்செயற்குழு அதனைக் கூறியது.
AstraZeneca தடுப்பூசியின் முதலாவது டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் 12 வார இடைவெளி இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் WHO பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள சிலாங்கூரில் ஆறு மாவட்டங்களிலும் KLலிலும் Prasaranaவின் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் வழக்கம் போலவே இருக்கும்.
அச்சேவைகள் காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
LRT, MRT, Monorail சேவைகளும் நடப்பில் உள்ள அட்டவணைபடி செயல்படும்.
KLலில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமலில் இருக்கும் காலம் நெடுகிலும் ரமலான் மற்றும் Aidilfitri சந்தைகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
அதே சமயம் ஜொகூரில் MCO விதிக்கப்பட்டுள்ள JB, Kulai, மற்றும் Kota Tinggiயிலும் ரமலான், Aidilfitri சந்தைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும் கடுமையான தர செயல்பாட்டு நடைமுறை SOP பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather