← Back to list
உணவுகளை வாங்கிச் செல்ல மட்டுமே முடியும்!
May 06, 2021
இன்று முதல் சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களில் யாரும் அமர்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை!
வாடிக்கையாளர்கள் உணவுகளை பொட்டலமிட்டு வாங்கிச் செல்ல மட்டுமே முடியும் என மாநில Menteri Besar அறிவித்துள்ளார்.
உணவுக் கடைகள் மற்றும் உணவகங்கள் அதிகாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு வரை திறந்திருக்கலாம்.
வரும் சனிக்கிழமை தொடங்கி, MCO பகுதிகளில் ரமலான் சந்தையை நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என அவர் சொன்னார்.
துணி சலவை கடைகள், மூக்குகண்ணாடி சேவை கடைகள் மற்றும் கார் கழுவும் கடைகள் அதிகாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
எனினும், சிகை அலங்கார நிலையங்களில் முடித் திருத்தும் சேவை மட்டுமே வழங்க அனுமதிக்கப்படுகின்றது.
சிலாங்கூர் மற்றும் KL தவிர்த்து, ஜொகூர், திரங்கானு மற்றும் பேராக்கில், COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள இடங்களில் நாளை தொடங்கி MCO நடப்புக்கு வருகின்றது.
மலேசியாவுக்குள் நுழையத் தடை!
COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மேலும் சில நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அத்தடை அறிவிக்கப்பட்டது.
தற்போது, வங்காளதேசம், பாகிஸ்தான் நேப்பாளம் மற்றும் இலங்கையில் இருந்து வரும் பயணிகளுக்கும் அத்தடை விரிவுப்படுத்தப்படுவதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்துள்ளார்.
நீண்ட கால பயண அட்டைகள் வைத்துள்ளவர்கள், வியாபார நோக்கத்திற்காக பயணிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு அத்தடை பொருந்தும் என்றாரவர்.
சாதாரண உடையில் கண்காணிப்பு!
பகாங் குவாந்தானில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் உள்ள காவல் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மக்களின் நடமாட்டத்தையும், அவர்கள் SOPயை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதையும் கண்காணிக்க அவ்வாறு செய்யப்படுகிறது.
சுவாசக் கவசம் அணிவதிலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதிலும் பலர் இன்னும் மெத்தனம் காட்டி வருவதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மக்களிடம் வேண்டுமென்றே குற்றம் குறைக் கண்டுப்பிடிப்பது தங்களது நோக்கம் அல்ல;
மாறாக, COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த சற்று கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டியிருப்பதாக குவாந்தான் காவல் துறை கூறியது.
தொற்றுப் பரவலை தடுக்க, வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் வயதானவர்களை, பேரங்காடிகள், ரமலான் சந்தைகள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சாலை தடுப்புச் சோதனைகள் நீடிக்கும்!
சிலாங்கூரில் 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை தொடங்கியுள்ளதை அடுத்து, PJவில், காவல் துறையின் 4 சாலைத் தடுப்புச் சோதனைகள் தொடரும்!
Petaling மாவட்டத்தை உட்படுத்திய Sungai Buloh டோல் சாவடி, Kota Damansara, Damansara மற்றும் Subang ஆகியவை அப்பகுதிகளாகும்.
கனடாவை மலேசியாவும் பின்பற்ற வேண்டும்!
18 வயதுக்கு கீழ்பட்டோருக்கு Pfizer-BioNTech தடுப்பூசியை பயன்படுத்த சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கும் என தாம் நம்புவதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கூறியுள்ளர்.
Pfizer தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு பயன்படுத்த, உலகின் முதல் நாடாக கனடா அனுமதி வழங்கியிருப்பதை அடுத்து Dr Jemilah Mahmood அவ்வாறு கூறினார்.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய ஆபத்துகள் இருப்பதால், அவர்களையும் இத்தடுப்பூசி திட்டத்தில் சேர்த்துக் கொள்வதன் வாயிலாக, கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை மலேசியா அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Jaringan Prihatin பரிவுமிக்கத் திட்டம்!
இலக்கயியல் பயனீட்டு சவால்களை எதிர்கொள்ள, அரசாங்கம், Jaringan Prihatin பரிவுமிக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்திட்டத்தின் வாயிலாக, B40 குடும்பங்களைச் சேர்ந்த 85 லட்சம் மக்கள் விவேகக் கைப்பேசியை வாங்கவும், இணையச் சேவையை பெறுவதற்கான பண உதவியை பெற்று பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த நடிகர் பாண்டு மரணம்!
தமிழ்த் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகரும் பேச்சாளருமான பாண்டு, கொரோனா தொற்றால் தனது 74-வது வயதில் மறைந்தார்.
Image: galatta.com
கொரோனா பாதிப்பால் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நடிகர் பாண்டுவின் உடல்நிலை இன்று அதிகாலை மோசமடைந்து, அவர் உயிரிழந்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather