← Back to list
PT3 தேர்வு ரத்து!
Apr 28, 2021
இவ்வாண்டின் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான PT3 தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக எஞ்சியுள்ள தவணை குறிப்பாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் உள்ளிட்ட சில அம்சங்களைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Datuk Dr. Radzi Jidin கூறினார்.
“Antara asas utama yang kita pertimbangkan dalam membuat keputusan untuk membatalkan PT3 bagi tahun 2021 adalah mengambil masa yang ada bagi murid-murid kita membuat persediaan, khususnya secara bersemuka bersama guru-guru di sekolah.”
Covid-19 நிலவரமும் அம்முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என அமைச்சர் சொன்னார்.
இதனிடையே இவ்வாண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான UPSR சோதனை அகற்றப்படுகிறது.
பள்ளி மதிப்பீட்டு முறை அடிப்படையில் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவர் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்துள்ளது.
புதிதாக மூவாயிரத்து 142 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
AstraZeneca தடுப்பூசி Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படாது.
தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairy Jamaluddin அவ்வாறு கூறியிருக்கிறார்.
மாறாக AstraZeneca தடுப்பூசி, KL மற்றும் சிலாங்கூரில் சிறப்புத் தடுப்பூசி மையங்களில் தன்னார்வ முறையில் அதனைப் போட்டுக் கொள்ள விரும்புவோருக்குப் போடப்படும் என அவர் விளக்கினார்.
Covid-19 பீடித்தவர்களில் புகைப் பிடிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சாதாரணமானவர்களைக் காட்டிலும் மோசமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சுகாதார அமைச்சு அவ்வாறு எச்சரித்திருக்கிறது.
கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, மோசமான சுவாசப் பிரச்னை ஆகியவை அவற்றில் அடங்கும் என அது சுட்டிக் காட்டியது.
கடந்தாண்டு பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப்பட்ட ஐயாயிரத்து 800 Covid-19 நோயாளிகளை உட்படுத்திய ஆய்வில் அது கண்டறியப்பட்டதாக அமைச்சு மேலும் கூறியது.
நோன்புப் பெருநாளையொட்டி நாடு முழுவதும் அனைத்து டோல் சாவடிகளிலும் சாலைத் தடுப்புச் சோதனைகள் கடுமையாக்கப்படும்.
மாநிலம் விட்டு மாநிலம் கடக்கும் சம்பவங்களைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படுவதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்தார்.
இதனிடையே Hari Rayaவின் போது நாடு முழுவதும் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் விடுமுறைகள் முடக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தக்க வைத்துக் கொள்ளப்படுகிறது.
RON95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென்னாகவும், RON97 லிட்டருக்கு 2 ரிங்கிட் 58 சென்னாகவும், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவும் நீடிக்கும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather