← Back to list
இணையம் வழி கல்வி சில மாணவர்களுக்குச் சுமையைக் கொடுக்கும்!
Apr 28, 2021
 

நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு அனைத்து பள்ளி மாணவர்களும் இணையம் வழி கற்றல் கற்பித்தலை தொடருவர் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது வரவேற்கக் கூடிய ஒன்று!
மோசமடைந்து வரும் Covid-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இது உதவும் என்பதோடு, இது ஒரு பாதுகாப்பான அணுகுமுறையும் கூட என கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு PAGE தெரிவித்துள்ளது.
என்றாலும், இணைய போதனா முறைக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் இல்லாத மாணவர்களுக்கு, இது சவாலாக அமையக்கூடும் என PAGEசின் கெளரவச் செயலாளர் Tunku Munawirah Putra கூறுகின்றார்.
மூன்றில் இரு பங்கு மாணவர்களிடம் போதுமான இணைய வசதியும், தொடர்பு சாதனங்களும் இல்லாமல் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
பள்ளிகளை உட்படுத்திய Covid-19 சம்பவங்கள் உயர்ந்து வரும் நிலையில், நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்கள் இரு வாரங்களுக்கு வீட்டிலிருந்தே இணையம் வழி வகுப்புகளை மேற்கொள்வர் என கல்வி அமைச்சர் நேற்று அறிவித்தார்.
நிலைமைப் பொறுத்து அம்முறையானது நீட்டிக்கப்படுமா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என்றாரவர்.
 
----- 

சிலாங்கூரில் Covid-19 காரணமாக மேலும் 30 பள்ளிகள் மூடப்படுகின்றன.
கிள்ளானில் ஐந்து பள்ளிகள், Kuala Selangorரில் மூன்று பள்ளிகள், செப்பாங்கில் மூன்று பள்ளிகள், Petaling Perdanaவில் ஏழு பள்ளிகள், Gombakகில் இரு பள்ளிகள், Petaling Utamaவில் மூன்று பள்ளிகள் மற்றும் Hulu Langatடில் ஏழு பள்ளிகள் அதிலடங்கும் என Malaysiakini தகவல் கூறுகின்றது.
இன்று தொடங்கி இரு நாட்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூட மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை தான் சிலாங்கூரில் 79 பள்ளிகள் Covid-19-னால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
----- 

நோன்பு பெருநாளுக்கு உயர்கல்வி கழக மாணவர்களை சொந்த ஊர் திரும்ப அனுமதிப்பது மீதான முடிவு இன்று எடுக்கப்படும்.
அதன் தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றம் இன்று விவாதிக்கும் என்றும், உயர்கல்வி கழக மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும், உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, SOP தொடர்பிலான உயர்கல்வி கழகங்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என Datuk Seri Dr. Noraini Ahmad கூறினார்.
------
பேராக், Gopengகிலுள்ள Matriculation கல்லூரி ஒன்றில் சுவாசக் கவசம் அணியாததற்காக ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதத்தை எதிர்நோக்கியிருந்த ஆறு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையைக் குறைக்குமாறு அவர்கள் கோரியிருந்த நிலையில், அவர்கள் அறவே அதனைச் செலுத்த வேண்டியதில்லை என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதம் நியாயமற்றது என கூறி சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வந்து குறிப்பிடத்தக்கது.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather