← Back to list
விதிமுறை மீறல் மீதான நடவடிக்கைகள் வழிக்காட்டியை பின்பற்றியிருக்க வேண்டும்!
Apr 27, 2021
நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை MCOவின் கீழ், SOPகளை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் வழிகாட்டிகளை பின்பற்றியிருக்க வேண்டும்.
சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan அதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்த வழிக்காட்டியின் கீழ், MCO பகுதிகளில் கடை நடத்துபவர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறினால் அவர்களுக்கு கூடியப்பட்சம் 10 ஆயிரம் ரிங்கிட் வரை மட்டுமே தண்டம் விதிக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அப்படி தண்டம் பெறுபவர்கள், ஏழு நாட்களுக்குள் அதனை செலுத்தினால், அவர்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
Kelantanனில் MCO விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு பிறகும் அங்காடி Burger கடையை திறந்து வைத்திருந்தவருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவத்தை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
கல்வி அமைச்சின் முடிவை வரவேற்கின்றோம்!
நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி மாணவர்கள் இரு வாரங்களுக்கு வீட்டில் இருந்து கல்வி கற்பார்கள் என்ற கல்வி அமைச்சின் முடிவை, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP வரவேற்றிருக்கின்றது.
மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிச் சார்ந்த அனைவரது நலனை பாதுகாக்க இது சிறந்த வழி என NUTP தலைவர் Aminuddin Awang கூறியுள்ளார்.
ஜொகூர், கெடா, Kelantan மற்றும் திரங்கானுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மே 16 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை வீட்டில் இருந்து கல்வி கற்பார்கள்.
பெர்லீஸ், பினாங்கு, பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், சபா, சரவாக், கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்தராஜெயாவைச் சேர்ந்த மாணவர்கள், மே 17ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை PdPR-ரை மேற்கொள்வார்கள்.
மே 28ஆம் தேதிக்கு பிறகு, ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்கள் மத்திய பள்ளி தவணை விடுமுறையில் இருப்பார்கள் என அமைச்சர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 சீற்றம் கருதி பள்ளிக்குச் செல்லாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது!
எனினும், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத காரணத்தை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளி நிர்வாகத்திற்கு முறையாக தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் கொண்ட மாணவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்பதையும் அமைச்சு வலியுறுத்தியது.
அதே சமயம், பள்ளிகளில் பிள்ளைகள் SOPகளை முறையாக பின்பற்ற பெற்றோர்கள் அவர்களை அடிக்கடி வலியுறுத்த வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
அந்த SOPகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய நடப்பில் ஏறக்குறைய 90 பள்ளிகள் சுழல் முறை வகுப்புகளை நடத்தி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவில் தொடர்ந்து ண்டவமாடும் கொரோனா!
இந்தியாவில், 2ஆம் கட்ட COVID-19 பரவல் மிக மோசமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் அங்கு ஈராயிரத்து 806 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
ஆகக் கடைசியாக தமிழகத்தில், 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இவ்வேளையில், தமிழகத்தில் COVID-19 மோசமடைய தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறது.
அங்கு அத்தொற்று அதிகரிக்க தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், சுவாசக் கவசம் அணியாமலும் பேரளவில் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களே காரணம் என நீதிமன்றம் சாடியிருக்கின்றது.
இந்நிலையில் வாக்குகள் எண்ணப்படும் நாளான மே 2-ஆம் தேதி, வாக்கு எண்ணும் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பது, அனைவரும் சுவாசக் கவசம் அணிந்திருப்பதை உறுதிச் செய்வது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இல்லையென்றால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் என நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather