← Back to list
உபாதைகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்!
Apr 26, 2021
நாட்டில் மேலும் 13 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஈராயிரத்து 776 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் மிக அதிகமாக 762 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
AstraZeneca தடுப்பூசி பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானது என சுகாதார அமைச்சு மீண்டும் தெரிவித்திருக்கிறது.
ரத்த உறைவு பிரச்னை மிக அரிதாக நிகழக்கூடிய ஒன்று என்பதையும் அது சுட்டிக் காட்டியது.
அத்தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதைக் குறைப்பதோடு, Covid-19னால் மரணமடையும் சாத்தியத்தையும் குறைப்பதாக அமைச்சு மேலும் கூறியது.
Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கும் என நம்புவதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairy Jamaluddin தெரிவித்திருக்கிறார்.
“Ramai lagi yang perlu daftar tapi saya rasa ramai yang masih tunggu dan lihat, tapi sebenarnya pelaksanaan Fasa 2 ini sangat penting sebab bila ramai orang tengok warga emas sudah dapat vaksin dan tidak apa-apa alahan teruk, tidak apa-apa kesan sampingan yang teruk, yang muda ni rasa lebih yakin lah ini akan membina keyakinan orang ramai untuk menerima vaksin.”
தடுப்பூசி போட்டுக் கொள்ள நாடு முழுவதும் இதுவரை கிட்டதட்ட 93 லட்சம் பேர் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.
காய்ச்சல், தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லத் தேவையில்லை.
அதே சமயம் அப்பாதிப்புகளைக் கொண்டுள்ள பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba கேட்டுக் கொண்டுள்ளார்.
“Kerana ada kes-kes yang direkodkan setakat ini dia datang daripada keluarga, ibu bapa yang positif, anak tidak bergejala tetapi merebak di kawasan sekolah"
இவ்வேளையில் Covid-19 மருத்துவ பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் அல்லது வீட்டில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளவர்களும் கூட தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் இன்றும், நாளையும் 79 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட பள்ளிகளில் COVID-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வேளையில் நெகிரி செம்பிலானில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் Covid-19 உறுதிச் செய்யப்பட்ட ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பினாங்கில் Covid-19 தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்ட 20 பள்ளிகள் இன்று தொடங்கி இரு நாட்களுக்கு மூடப்படுகின்றன.
திங்கட்கிழமை தொடங்கி மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி வழங்கப்படுவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மையில்லை என தேசிய பாதுகாப்பு மன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather