← Back to list
ரமலான் சந்தைகள் அதிகாலை 2 மணி வரை செயல்படலாம்!
Apr 23, 2021
நாட்டில் மேலும் எண்மர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வேளையில் புதிதாக ஈராயிரத்து 847 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக 748 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சரவாக், கிளந்தான் மற்றும் KLலிலும் கூட அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை முதல் ரமலான் சந்தைகள் அதிகாலை 2 மணி வரை செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்குகிறது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான தர செயல்பாட்டு நடைமுறைகள் SOPகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றாரவர்.
Covid-19 பீடித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள சிறப்பு விடுமுறைகள் வழங்குமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கல்வியமைசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மைய காலமாக நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான உத்தரவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதனால் உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே ஆசிரியர்கள் பதிவு செய்யப்படாத விடுமுறைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக NUTP விளக்கியது.
சிலாங்கூர் Bantingங்கில் உள்ள அறிவியல் இடைநிலைப் பள்ளியில் நாளை முதல் மே 7 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
அங்கு அதிகமான Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதே அதற்குக் காரணம்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தது ஆயிரம் ரிங்கிட் சிறப்பு உதவி நிதியாக வழங்கப்படவிருப்பதாக மாநில MB அறிவித்துள்ளார்.
மே 19 ஆம் தேதியில் இருந்து அந்த உதவிநிதி கொடுக்கப்படும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather