Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

Apr 21, 2021


சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

நாட்டில் இன்று புதிதாக ஈராயிரத்து 340 Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மீண்டும் மிக அதிகமாக 526 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் 11 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.

சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

மாணவர்கள் பள்ளிகளுக்குச் சுழல் முறையில் செல்ல மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் பரிந்துரைத்திருக்கிறது.

அதன் வழி பள்ளிகளில் Covid-19 பரவலைக் கட்டுப்படுத்துவதோடு தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படாததையும் தவிர்க்க முடியும் என NUTP கூறியது.

உதாரணத்திற்கு ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து பள்ளிக்குச் செல்வதையும் இணையம் வழி வீட்டில் இருந்து பாடம் கற்றுக் கொடுப்பதையும் சுழல் முறையில் செய்யலாம் என அது விளக்கியது.

பள்ளிகளை உட்படுத்திய Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பள்ளிகளை தற்காலிகமாக மூடுமாறு முன்னதாக தேசிய பெற்றோர், ஆசிரியர் சங்க நல்லிணக்க மன்றம் கூறியிருந்ததது தொடர்பில் NUTP அவ்வாறு தெரிவித்தது.

சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

பேராவில் ஆறு matriculation கல்லூரி மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தொகையை மேலும் குறைக்க மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதால், விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத்துறை கூறியது.

அண்மையில் அக்கல்லூரிக்கு நச்சுணவு பாதிப்பு குறித்த விசாரணைக்காகச் சென்ற அத்துறை, அச்சமயத்தில் சுவாசக் கவசம் அணியாமல் இருந்த அம்மாணவர்களுக்கு ஆயிரத்து 500 ரிங்கிட் தண்டம் விதித்தது குறிப்பிடத்தக்கது.  

சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

பகாங் மாநிலத்திற்குள் நுழைய, போலி அனுமதிக் கடிதத்தை பயன்படுத்தியதாக நம்பப்படும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

KLலில் இருந்து Kuantan செல்வதற்கான காவல் துறையின் அனுமதி எனக் கூறி அவர்கள் காட்டிய கடிதம் அசலானது இல்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரே வாகனத்தில் பயணித்த அவ்விரு மாணவிகளும் cannabis  வகை போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வயதானவர்களை ஊக்குவிப்பதில் ஆக்ககரப் பங்காற்றுமாறு மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தேசியத் தடுப்பூசித் திட்டத்திற்குப் பதிந்து கொண்டுள்ள முதியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி அவர்கள் FMTயிடம் தங்களின் அக்கருத்தை வெளியிட்டனர். 

இலக்கு வைக்கப்பட்ட 38 லட்சம் முதியவர்களில் பாதி பகுதியினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை பதிந்து கொண்டுள்ளனர். 

சுழல் முறையில் நேரடி வகுப்புகள்!

கிளந்தானில் மேலும் மூன்று மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.

Covid-19 பரவல் அதிகம் காணப்படும் Jeli, Kuala Krai மற்றும் Gua Musangங்கில் நாளை முதல் இம்மாதம் 29 ஆம் தேதி வரை MCO அமலில் இருக்கும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather