← Back to list
95 விழுக்காட்டினருக்கு முதலாவது டோஸ்!
Apr 20, 2021
நாட்டில் இன்று புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஈராயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது.
புதிதாக ஈராயிரத்து 341 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சரவாக்கில் மிக அதிகமாக 600 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிலாங்கூர், கிளந்தான், KL மற்றும் ஜொகூரிலும் மூன்றிலக்க எண்ணில் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் மேலும் மூவர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் முன்களப் பணியாளர்களில் குறைந்தது 95 விழுக்காட்டினருக்கு Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் இம்மாத இறுதி வாக்கில் இரு டோஸ்களும் போட்டு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான முன்களப் பணியாளர்களுக்கு முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் தடுப்பூசி போட தேதி கொடுக்கப்பட்டவர்களில் 84 விழுக்காட்டினர் வருகையளித்திருந்ததாக Khairy கூறினார்.
தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, ஆக்ககர வியூகத் தகவல் தொடர்பு முறைகள் மேம்படுத்தப்படும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான அவர் சொன்னார்.
நேற்று தொடங்கிய இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பேராவில் COVID-19 தடுப்பு SOPகளை மீறியதற்காகக் கூறி சில matriculation மாணவர்களுக்கு ஆயிரத்து 500 ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அவ்விவகாரத்தை பேரா மாநில சுகாதாரத் துறையும் கவனித்து வருவதாக. சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட matriculation கல்லூரியில் உள்ள சிற்றுண்டி சாலையில் நச்சுணவுப் பாதிப்பு குறித்து விசாரிக்கச் சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், சுவாசக் கவசம் அணியாத மாணவர்களுக்கு தண்டம் விதித்ததாக கூறப்படுகிறது.
ஏறக்குறைய 5 மாதங்களாக அக்கல்லூரியிலேயே முடங்கிக் கிடக்கும் அம்மாணவர்கள் வெளியே எங்கும் சென்றதில்லை.
எனவே அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது நியாயமில்லை என சமூக வலைத்தளவாசிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேனிலைவைக் கொண்டாட மாநிலம் கடப்பதற்கு பொய்யான விவரங்களைக் கொடுத்துதை ஒப்புக் கொண்ட தம்பதியர் ஒருவருக்கு KL நீதிமன்றம் ஒரு நாள் சிறைத் தண்டனையும் ஈராயிரத்து 500 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
மாநில எல்லைகளைக் கடக்கும் வழிமுறைகளை அவர்கள் கூறும் காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Covid-19 தடுப்பு SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சுவாசக் கவசம் அணியாதவர்கள் என தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஊழியர் சேமநிதி கணக்கில் உள்ள தொகைக்கு சந்தாதாரர்களுக்கு லாப ஈவு வழங்கப்படும் வயது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள செய்தியை EPF மறுத்துள்ளது.
பணி ஓய்வு பெற்ற பிறகு ஒரு பகுதி சேமிப்பை வைத்திருப்பவர்களுக்கு நூறு வயது வரை தொடர்ந்து லாப ஈவு வழங்கப்படும்.
அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல 75 வயது வரை மட்டுமே அல்ல என அது தெளிவுபடுத்தியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather