Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பயண அனுமதி!

Apr 20, 2021


அவசியத் தேவைகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க வழங்கப்படும் அனுமதி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரைக்கும் மட்டுமே!

திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பயண அனுமதி!

வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரைக்குமான பயணங்களுக்கு அனுமதி இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

எனினும், ஆபத்து அவசரம், இறப்பு உள்ளிட்டவற்றை உட்படுத்திய வாரக் கடைசிப் பயணங்களுக்கு தளர்வு வழங்கப்படும்.

தினசரி COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு மாநிலம் கடந்துப் பயணிக்க இப்போதைக்கு அனுமதி இல்லை.

மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.


 

Covid-19: 19 பள்ளிகளை மூட உத்தரவு!

Petaling மாவட்டத்தில் COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ள 19 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்பள்ளிகளில் COVID-19 தொற்றுப் பீடித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கிருமி நாசினி தெளிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவிருப்பதாக மாவட்ட சுகாதார துறை தெரிவித்தது.

 

Covid-19 நிலவரம்!

COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஈராயிரத்தை தாண்டியிருக்கிறது.

நேற்று மொத்தம் ஈராயிரத்து 78ஆக சம்பவங்கள்பதிவாகின.

திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பயண அனுமதி!

ஆக அதிகமாக சரவாக்கில் 589 சம்பவங்கள் பதிவான வேளை, அதற்கடுத்த நிலையில், சிலாங்கூர் உள்ளது.

 

கணவன் - மனைவி ஒரே தேதி பெறலாம்!

COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள கணவன் - மனைவி ஆகிய இருவரும் ஒரே தேதி மற்றும் நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என, தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

தம்பதிகளின் வேண்டுகோளை அடுத்து அந்த வசதி ஏற்படுத்தி தரப்படுவதாக Khairy சொன்னார்.

 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி....

இந்தியாவில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

COVID-19 சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மற்றொரு நிலவரத்தில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather