Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிகளை மூடும் முடிவு நன்காராயப்படும்!

Apr 19, 2021


COVID-19 சீற்றம் காரணமாக பள்ளிகளை மூடுவதற்கு முன் நன்காராயப்படும்!

மாவட்ட சுகாதார துறை, கல்வி அமைச்சு மற்றும் மாநில அரசு ஆகிய தரப்புகள் கலந்து பேசிய பின்னரே, பள்ளிகளை உட்படுத்தி எந்த முடிவும் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பள்ளிகளை மூடும் முடிவு நன்காராயப்படும்!

ஒரு பள்ளியில் எத்தனைப் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்ற தேவை  குறித்தும் கலந்தாலோசிக்கப்படும் என  அமைச்சர் Datuk Seri Dr Adham Baba கூறியுள்ளார்.

ஒருவேளை, COVID-19 தொற்று, பள்ளிப் பணியாளர்களை உட்படுத்தவில்லை என்றால், பள்ளிகள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் அவர் கூறினார்.

Kelantanனில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அறிவிக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களில், ஏப்ரல் 24 ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

 

2ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் இன்று தொடங்குகிறது!

2ஆம் கட்ட COVID-19 தேசிய தடுப்பூசித் திட்டம் இன்று தொடங்குகிறது!

இத்திட்டத்தின் கீழ், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என ஏறக்குறைய 36 ஆயிரம் பேர்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது.

பள்ளிகளை மூடும் முடிவு நன்காராயப்படும்!

அவர்களில், 25 ஆயிரம் பேர் முதியவர்கள்; 11 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகள் என, அமைச்சர் Datuk Seri Rina Mohd Harun தெரிவித்தார்.

இத்தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலக்கு வைக்கப்பட்டோரை, தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிய வைப்பதற்கான பல்வேறு திட்டங்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றாரவர்.

கெடா, மலாக்கா, பினாங்கு, பகாங், சபா, சரவாக், திரங்கானு மற்றும் Labuan-னில் இந்த 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

 

99 விழுக்காட்டினருக்கு தொற்றுப் பீடிக்கவில்லை!

COVID-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்அத்தொற்றுக்கு ஆளான மருத்துவ முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என, அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டு முடித்த 4 லட்சத்து 38 ஆயிரம் பேரில், ஏறக்குறைய 40 பேருக்கு மட்டுமே அத்தொற்று கண்டதாக அமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

ஆக, தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் முடித்துக் கொண்ட 99 விழுக்காட்டினருக்கு அத்தொற்று பீடிக்கவில்லை என்பதையே அவ்வெண்ணிக்கை காட்டுவதாக அமைச்சு கூறியது.

மற்றொரு நிலவரத்தில், 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் Datuk Saifuddin Abdullah பரிந்துரைத்துள்ளார்.

முன்களப் பணியாளர்களில் அவர்களும் ஒரு பகுதியினர் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
 

 

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா முழுக்க 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 கொரோனா சம்பவங்கள் பதிவாகின.

இந்நிலையில், தமிழகத்தில், COVID-19 சீற்றத்தை கட்டுப்படுத்த, நாளை தொடங்கி இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகின்றது.

இதையடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும், ஊரடங்கு அமுலில் இருக்கும்.

தவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather