← Back to list
மீண்டும் ஈராயிரத்தைத் தாண்டியது!
Apr 16, 2021

நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தினசரி Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்தைக் கடந்துள்ளது. 
புதிதாக ஈராயிரத்து 551 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சரவாக்கில் மிக அதிகமாக 960 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்து சிலாங்கூரிலும் KLலிலும் அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
மேலும் இருவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.

சரவாக், சீனத் தயாரிப்பிலான Cansino Covid-19 தடுப்பூசி கையிருப்பை விரைந்து பெற அம்மாநில அரசுடன் ஒத்துழைக்க சுகாதார அமைச்சு தயாராக இருக்கிறது.
பூமி மேற்பரப்பின் வடிவம், உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சரவாக்கில் ஒரு டோஸ் மட்டுமே தேவைப்படும் CanSino தடுப்பூசி பயனீடு பொருத்தமாக இருக்கும் என அது கூறியது.
இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கும் அத்தடுப்பூசி ஆக்ககரப் பலனைக் கொடுக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.  

சிலாங்கூர், Kajang மாவட்ட காவல் துறை தலைமையகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் Covid-19 தடுப்பூசியால் மரணமடைந்திருப்பதாகக் கூறப்படுவதை மாவட்ட காவல் துறைத் தலைவர் மறுத்திருக்கிறார். 
அக்காவல் வீரரின் சவ பரிசோதனை முடிவுக்காகத் தாங்கள் இன்னமும் காத்திருப்பதாக அவர் கூறினார். 
சம்பந்தப்பட்ட காவல் வீரர் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்ட பின் உயிரிழந்ததாக முன்னதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.

MyBayar Saman செயலி வாயிலாக Bukit Amanனின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை 4.22 மில்லியன் ரிங்கிட் சம்மன் தொகையைத் திரட்டியுள்ளது. 
அச்செயலியைப் பயன்படுத்தி சம்மன் தொகையைச் செலுத்துவோருக்கு 50 விழுக்காட்டு கழிவுச் சலுகை வழங்கும் அத்திட்டம் 22 நாட்களுக்குப் பிறகு நேற்றுடன் முடிவடைந்தது.  
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather