← Back to list
3 காரணங்களுக்காக மட்டுமே மாநிலம் கடக்க முடியும்!
Apr 16, 2021
COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதை அடுத்து, மாநில விட்டும் மாநிலம் பயணிப்பதற்கான அனுமதியை காவல் துறை கடுமையாக்கி வருகின்றது.
சிலர் அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, சுயநலத்துடன் நடந்துக் கொள்வது குறித்து பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திகளும் அதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மூன்று காரணங்களுக்காக மட்டுமே இனி மாநில எல்லைகளை கடந்துப் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது, நேரடி அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரை உட்படுத்திய ஆபத்து அவசர சூழ்நிலைகளுக்கான பயண அனுமதி; இதற்காக மாநிலம் கடந்துச் செல்ல விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் அதற்குரிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும்.
2ஆவது இறப்புக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை, மூன்றாவது, தூரத்தில் வாழும் வாழ்க்கைத் துணையை உட்படுத்திய பயண அனுமதி என, இந்த 3 காரணங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் உள்ளிட்ட இதர விருந்து நிகழ்ச்சிகளுக்கு மாநிலம் கடந்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிலவரம்!
மார்ச் 5ஆம் தேதிக்கு பிறகு நாட்டில் COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை, முதன் முறையாக ஈராயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று ஈராயிரத்து 148 பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதில் ஆக அதிகமாக 512 சம்பவங்கள் சரவாக்கை உட்படுத்தியுள்ளன; அதற்கடுத்த நிலையில் சிலாங்கூரும், Kelantanனும் உள்ளன.
இன்னும் 17 ஆயிரத்து 525 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
55 பேர் கைது செய்யப்பட்டனர்!
நேற்று முந்தினம், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான SOPகளை மீறியதற்காக 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 54 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்ட வேளை, ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.
SOPயைப் பின்பற்றுங்கள்!
கூட்டரசுப் பிரதேச அமைச்சின் கண்காணிப்பில் உள்ள ரமலான் சந்தைகளில், COVID-19 சம்பவங்கள் பரவினால், அச்சந்தைகள் உடனடியாக மூடப்படும் என அதன் அமைச்சர் Tan Sri Annuar Musa கூறியுள்ளார்.
எனவே, ரமலான் சந்தைகளில் SOPகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிச் செய்யுமாறு அதன் ஏற்பாட்டாளார்களை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலி இணைய அகப்பக்கத்தை பயன்படுத்தி மோசடி!
வங்கி ஒன்றின் போலி இணைய அகப்பக்க முகவரியைப் பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றி பணம் பறித்து வரும் மோசடி கும்பல் குறித்து கவனமுடன் இருக்குமாறு Bukit Aman எச்சரித்துள்ளது.
வங்கிக் கணக்கில் பிரச்னை இருப்பதாக கூறி போலி மின்னஞ்சல் அனுப்பும் அக்கும்பல், பின்னர் அதில் இணைக்கப்பட்ட linkகை திறக்கச் சொல்லி அதன் வழி, பயனர்களின் வங்கிக் கணக்கில் ஊடுருவி பணத்தை மீட்கும் நூதனத்தை கையாண்டு வருவது அம்பலமாகியிருக்கின்றது.
இதன் தொடர்பில், 22 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான நட்டத்தை உட்படுத்தி, இதுவரை 4 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக Bukit Aman கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather