Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

Apr 13, 2021


COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதி கிடைத்தவர்கள், தங்களது வருகை குறித்து விரைந்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!

தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்போரின் எண்ணிக்கை தெரிந்தால் தான் அதற்கேற்ப தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே தயார் செய்து வைக்க முடியும் என, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.

covid-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

எண்ணிக்கை இல்லாவிட்டால், தேவைக்கு அதிகமாவோ, அல்லது தேவைக்கு குறைவாகவோ தடுப்பூசிகளை தயார் நிலையில் வைத்து, பின்னர் அதனால் விரயமோ அல்லது பற்றாக்குறையோ ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என்பதை Khairy குறிப்பிட்டார்.

குறித்த தேதியில் வர முடியாதவர்களுக்கு மாற்று தேதி கொடுக்கப்படும்; அப்போதும் அவர்கள் வரவில்லை என்றால், அதற்கான காரணம் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2ஆம் கட்ட COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டவர்களில், இதுவரை 31 ஆயிரத்து 776 பேருக்கு MySejahtera மற்றும் SMS குறுஞ்செய்தி  வாயிலாக, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நாள் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பட்டுள்ளன.

அவர்களில், 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது வருகையை உறுதிப்படுத்தியுள்ள வேளை, 343 பேர் குறிப்பிட்ட தேதியில் தங்களால் வர இயலாது என தெரிவித்திருப்பதாக Khairy சொன்னார்.

எஞ்சிய 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதாவது ஏறக்குறைய 57 விழுக்காட்டினர் தங்களது தங்களது வருகை குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றாரவர்.

covid-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

மற்றொரு நிலவரத்தில், 2ஆம் கட்ட COVID-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீன தயாரிப்பான Sinovac (சைனோவேக்) தடுப்பூசி போடப்படும் என Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

Sinovac தடுப்பூசி வயதானவர்களுக்குப் போட பாதுகாப்பாகவும் ஆக்ககரமாகவும் இருப்பது ஆகக் கடைசி தரவுகளின் வழி தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

துருக்கி, பிரேசில், Chile ஆகிய நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Sinovac தடுப்பூசி போடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

கொரோனா மீண்டும் பரவுமா? 

நாட்டில் 4ஆம் கட்ட COVID-19 பரவல் ஏற்படும் சாத்தியம் உள்ளது!

மீட்சிக்கான மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கடந்த 14 நாட்களில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட தொற்று அபாய மதிப்பீடுகளின் வாயிலாக அதற்கான சாத்தியம் தென்படுவதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

covid-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை குறைவதும் உயர்வதுமாக இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

நேற்று ஆயிரத்து  317 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை ஆயிரத்து 52 பேர் அத்தொற்றில் இருந்து மீண்டனர்.

 

SOPகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்!

இன்று புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், COVID-19 தடுப்பு SOPகளை கவனமுடன் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

covid-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

நோன்பு துறக்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது, ரமலான் சந்தைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்வது, மாநிலம் கடந்து பயணிப்பது போன்றவற்றை முடிந்த வரை செய்ய வேண்டாம் என சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah  வலியுறுத்தியுள்ளார்.

கட்டுப்படுத்தப்படாத நடவடிக்கைகள், சமூகத்தில் COVID-19 தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகி விடும் என்றாரவர்.

 

சில துறைகளில் அந்நிய தொழிலாளர்கள்.....

நாட்டில் சில தொழில் துறைகளில், அந்நிய நாட்டு  தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் சாத்தியம் குறித்து மனித வள அமைச்சு ஆராயும்!

covid-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

தோட்டத் தொழில், விவசாயம், தயாரிப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் ஈடுபட உள்நாட்டு தொழிலாளர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதற்கான வாய்ப்பு ஆராயப்படுவதாக அமைச்சர்  Datuk Seri M. Saravanan கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தொழில் துறைகளில் ஏறக்குறைய 4 லட்சம் வேலை வாய்ப்புகள் இன்னும் காலியாக இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டங்களுக்கு கழிவு!

இன்று தொடங்கி இரு மாதங்களுக்கு, போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டங்களுக்கு 70 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது!

covid-19 தடுப்பூசி குறித்த தகவலுக்கு விரைந்து பதிலளியுங்கள்!

கருப்பு பட்டியலிடப்பட்ட சாலை குற்றங்களுக்கும் இச்சலுகை உண்டு என சாலைப் போக்குவரத்து துறை JPJ அறிவித்துள்ளது.

JPJ நேரடி முகப்புகளில் நெரிசலை தவிர்க்க இயன்றவரை இணையம் வாயிலாக தண்டங்களை செலுத்துமாறு, அத்துறை பொது மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

 

21ஆம் தேதி வரை அவகாசம் உண்டு!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில், social visit அனுமதி அட்டை காலாவதியான அனைத்து அந்நிய நாட்டவர்களும், ஏப்ரல் 21 அல்லது அதற்குள் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும்!

அவ்வாறு செய்ய தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.

எனினும், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டவர்கள், மலேசியாவில் தங்கியிருக்க சிறப்பு அனுமதிப் பெற விண்ணப்பிக்கலாம்

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather