← Back to list
விரைந்து முடிவெடுக்க வேண்டுகோள்!
Apr 11, 2021
நோன்புப் பெருநாளின் போது மாநிலங்களைக் கடக்க அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து முன் கூட்டியே முடிவெடுக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பயணங்களை முறையாகத் திட்டமிட பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கவே அவ்வாறு வலியுறுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.
எனினும் Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீடுகளைப் பொருத்தே எந்த முடிவும் இருக்கும் என அவர் நினைவுறுத்தினார்.
Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்லும் தங்களது தொழிலாளர்களுக்கு முதலாளிகள் விடுப்பு வழங்க மனிதவள அமைச்சு ஒப்புதல் கொடுக்கின்றது.
முதலாளிகள் விடுப்பு வழங்குவது, பொதுமக்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள அவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டும்.
ஆயினும் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு கொடுப்பது முதலாளிகளைப் பொருத்தது என அது தெரிவித்தது.
அதே சமயம் அனைவரும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்வதில்லை என்பதால் அரசாங்கம் சிறப்பு விடுமுறையும் வழங்க முடியாது என அமைச்சு விளக்கியது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்லும் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க முதலாளிகளைக் கேட்டுக் கொள்வது அல்லது அதனைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அமைச்சுடம் பேசப்படும் என அண்மையில் தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பஹாங், Pekanனில் இளைஞர் ஒருவருக்கு மூவாயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டது.
அவர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியைத் தாண்டி வெளியே குதிக்க முயன்றதே அதற்குக் காரணம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather