← Back to list
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வயதினரில் மாற்றம்!
Apr 08, 2021
நாட்டில் COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், பொதுவில் கொரோனா நிலவரம் இன்னும் முழுமையாக சீரடையவில்லை என பிரதமர் கூறியுள்ளார்.
எனவே, நாடு சீக்கிரமே இப்பெருந்தொற்றில் இருந்து மீண்டு, பொருளாதாரம் சீரடைய அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என Tan Sri Muhyiddin Yassin கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், மலேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வயதினரில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 20 முதல் 29 வயதானவர்களே மிக அதிகமாக இத்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
அவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்திற்கும் அதிகம் என்பதோடு, அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் மிக அதிகமாக இத்தொற்றுக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
WHO தடுப்பூசிக்கான கடப்பிதழ்.....
COVID-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை அடையாளம் காண ஏதுவாக தடுப்பூசி கடப்பிதழை அறிமுகப்படுத்த இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் WHO கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் சில நாடுகள் எதிர்நோக்கியுள்ள சிக்கலை, இந்த கடப்பிதழ் திட்டம் இன்னும் மோசமாக்கக்கூடிய நிலை ஏற்படலாம் என WHO அஞ்சுகின்றது.
அனைத்துலக சுற்றுலா துறை மீட்சிக்கான அவசியத்தை அறிந்துள்ள போதிலும், உலகளவில் கொரொனா தடுப்பு மருந்து கையிருப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு சாலை தடுப்புச் சோதனை!
புனித ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் சாலை தடுப்புச் சோதனைகள் அதிகரிக்கப்படவிருப்பதாக Bukit Aman தெரிவித்துள்ளது.
பொது மக்கள் COVID-19 தடுப்பு SOP மீறி, மாநிலம் விட்டு மாநிலம் கடந்து சொந்த ஊர்களுக்கு பயணிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக Bukit Aman தெரிவித்தது.
நடப்பில் நாடு முழுவதும் 35 சாலை தடுப்புச் சோதனைகள் போடப்பட்டுள்ள நிலையில், குறுக்குப் பாதைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்.
முன்கூட்டியே கையெழுத்திடப்பட்ட அனுமதி கடிதம்! விசாரணை தொடங்கியுள்ளது!
மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க அனுமதி கோரும் கடிதம் முன்கூட்டியே கையெழுத்திடப்பட்டு, வெளியான சம்பவம் குறித்து காவல் துறை விசாரணையை தொடக்கியிருக்கின்றது.
எனினும், அக்கடிதத்தில் இருப்பதாக கூறப்படும் காவல் அதிகாரியின் கையொப்பம், போலியானது; அதில் மோசடி நிகழ்ந்திருக்கலாம் என தொடக்க கட்ட விசாரணைகள் காட்டுவதாக Kemaman மாவட்ட காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.
திரங்கானு Chukai காவல் துறை தலைவர் முன்கூட்டியே கையெழுத்திட்ட அனுமதி கடிதம் என கூறி, அது இதற்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அவசர மற்றும் அவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே மாநிலம் கடக்க அனுமதி வழங்கப்படும் என்ற கடுமையான விதிமுறைக்கு மத்தியில், முன்கூட்டியே கையொப்பம் இடப்பட்டு மிகச் சாதரணமாக வெளியிடப்பட்ட அக்கடிதம் சமூக வலைத்தளவாசிகளிடையே பெரும் குழப்பத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
TVET : வருமானத்தை ஈட்ட உதவும் கல்வி!
தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் கல்வி மற்றும் பயிற்சி TVET கல்வி என்பது, சிறந்த தேர்ச்சிப் பெறாத 2ஆம் நிலை மாணவர்களுக்கான கல்வி அல்ல!
மாறாக, எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் ஈட்ட உதவும் கல்வி என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்யக்கூடிய புதிய துறைகளின் திறன் வாய்ந்த ஆள்பலத்தை உருவாக்குவதில் TVET முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், 2018 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை TVET கல்வி வாயிலாக ஏழாயிரம் தொழில் முனைவர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக, உயர் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.
அவர்களில் சில தொழில்முனைவர்கள் தங்களுக்கு சிறந்த வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் அளவுக்கு உயர்ந்திருப்பதாக, அமைச்சர் Datuk Seri Dr Noraini Ahmad தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும், TVET பட்டதாரிகளை உட்படுத்திய சந்தை வாய்ப்புகள் 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather