← Back to list
அனுமதி இன்றி மாநிலம் கடக்காதீர்கள்!
Apr 06, 2021
புனித ரமலான் மாதத்தை ஒட்டி, மாநிலம் கடந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சிப்போருக்கு தண்டம் விதிக்கப்படும் என Bukit Aman எச்சரித்துள்ளது.
மாநில எல்லைகளில் சாலை தடுப்புச் சோதனைகள் கடுமையாக்கப்படும் என கூறிய காவல் துறை, முறையான அனுமதி வைத்துள்ளவர்கள் மட்டுமே மாநிலம் கடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றது.
இவ்வேளையில், Hari Rayaவுக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கும் முடிவு சுகாதார அமைச்சை பொறுத்தது என Putrajaya கூறியுள்ளது.
இதற்கு முன், கொண்டாட்டங்களுக்காக மாநிலம் விட்டு கடக்க அனுமதித்து அதனால் கொரோனா சம்பவங்கள் அதிகரித்த சூழ்நிலை இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருப்பதாக அது தெரிவித்தது.
மீண்டும் பரவுமா COVID-19?
மலேசியாவில், 4ஆம் கட்ட COVID-19 பரவல் ஏற்படுவதும், ஏற்படாமல் இருப்பதும் ஒரு சில அம்சங்களை பொறுத்தே அமையும் என சுகாதார அமைச்சு கூறுகின்றது!
மாநிலங்கள் கடக்க அனுமதிப்பது, கொரோனா தடுப்பு SOPகளை பின்பற்றுவதில் பொது மக்கள் காட்டும் அக்கறை மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆற்றல் ஆகியவற்றை பொறுத்தே, அந்நிலைமை அமையும் என அமைச்சு கூறியது.
SPM 2020: 2ஆம் கட்ட தேர்வு இன்று தொடங்கியது!
2020 SPM தேர்வு, 2ஆம் கட்டமாக இன்று தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறும்.
ஏறக்குறைய மூவாயிரம் மாணவர்கள் அத்தேர்வெழுதுகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் மற்றும் கொரோனா காரணமாக கட்டாய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டவர்கள் ஆவர்.
COVID-19 தடுப்பூசி: தன்னார்வ முறை மறு ஆய்வு செய்யப்படும்!
COVID-19 தடுப்பூசியை தன்னார்வ முறையில் போட்டுக் கொள்ளும் கொள்கையை, வரும் ஜூலை மாதம் அரசாங்கம் மறு ஆய்வு செய்யக்கூடும்!
அத்தொற்றுக்கு எதிராக நாடு கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதை உறுதிச் செய்ய அது அவசியமாவதாக, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.
அத்திட்டத்திற்கு பதிந்துக் கொண்டுள்ளோரின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதை அடுத்து அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
18 வயதுக்கு மேற்பட்ட மக்களில், இதுவரை 79 லட்சம் அதாவது ஏறக்குறைய 32 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டுள்ளனர்.
மலேசியா, மில்லியன் கணக்கான கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை அதன் விநியோகஸ்தரிடம் பெறும் என்றும் Khairy குறிப்பிட்டார்.
#Rasuah Busters இயக்கம்
கையூட்டு நடவடிக்கையை வேரறுக்க, Sinar Harian, Rasuah Busters இயக்கத்தை தொடக்கியிருக்கின்றது.
இந்த இயக்கத்தில் பங்கேற்க வருமாறு, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் தவிர்த்து, அரசு சார்பற்ற அமைப்புகளும் அழைக்கப்பட்டுள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather