← Back to list
இணையம் வழி மோசடி புகார்கள் அதிகரிப்பு!
Apr 03, 2021
COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு முதன் முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததில் இருந்து, இணையம் வழி மோசடி சம்பவங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.
பொருட்களுக்கான விலை குறித்து 9 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்ட நிலையில், மோசடி தொடர்பான புகார்கள் 11 ஆயிரத்தை கடந்ததாக உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர், விவகார அமைச்சு கூறியுள்ளது.
இதன் தொடர்பில் பேசிய அமைச்சு, இணையம் வழி பொருட்கள் வாங்கும் பயனீட்டாளர்கள், அதற்கு ஆதாரமாக கட்டண ரசீதுகளை உடன் வைத்திருக்குமாறு றிவுறுத்தியுள்ளது.
தாங்கள் வாங்கிய பொருள் குறித்து ஏதாவது புகார் இருந்தால், அதன் தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அது உதவியாக இருக்கும் என அமைச்சு கூறியது.
மலேசியாவில் உள்ள வட கொரியர்கள் பற்றிய தகவல்....
இந்நாட்டில் இன்னும் தங்கியுள்ள வட கொரியர்கள் அனைவரும், மலேசியா எனது 2ஆவது இல்லத் திட்டத்தின் பங்கேற்பாளர்கள் ஆவர்.
அவர்களது நடமாட்டம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador கூறியுள்ளார்.
மலேசியாவுடனான அரச தந்திர உறவை வட கொரியா முறித்துக் கொண்டிருப்பதை அடுத்து, சம்பந்தப்பட்ட வட கொரியர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்படுவார்களா என்பதை குடிநுழைவுத் துறையும், உள்துறை அமைச்சும் தீர்மானிக்கும் என IGP சொன்னார்.
அவ்விவகாரத்தை காவல் துறை, அவ்விரு தரப்புகளிடமே விட்டு விடுவதாக அவர் கூறினார்.
Miriயில் உள்ள பள்ளிகள் திறக்கப்படுகின்றன!
வரும் திங்கட்கிழமை தொடங்கி, சரவாக் Miriயிலுள்ள அனைத்து பள்ளிகளும் கடுமையான SOPகளுக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்படவுள்ளன.
ஒரு நேர அல்லது இரு நேரப் பள்ளியாகவோ அல்லது சுழல் முறையில் பள்ளி நேரடி வகுப்புகளை நடத்த அதன் நிர்வாகங்களுக்கு தேர்வுகள் வழங்கப்படுவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகள், தனிமனித இடைவெளியை பின்பற்ற ஏதுவாக மூன்றாம் தேர்வான சுழல் முறையை அமுல்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
SOP மீறல்: 100 பேர் கைது!
நேற்று முந்தினம், COVID-19 தடுப்பு SOPகளை மீறியதற்காக 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் அதிகமானோர் அதாவது 89 பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற தவறியிருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
மேலும் பத்து பேர் முறையான அனுமதியின்றி மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்து பயணித்ததற்காக பிடிப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.
இவ்வேளையில், நாட்டில் நேற்று COVID-19 தொற்றுப் பீடித்தவர்களை காட்டிலும், அத்தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவானது.
புதிதாக ஆயிரத்து 294 பேர் அத்தொற்றுக்கு ஆளாகினர்; ஆயிரத்து 442 அதில் இருந்து குணமடைந்தனர்.
இன்னும் 14 ஆயிரத்து 246 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather