Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசி: மாவட்டம் - மாநிலம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

Apr 02, 2021


COVID-19 தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டு முடிப்பவர்கள், விரைவில் மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்து பயணிக்க அனுமதிக்கப்படலாம் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்துள்ளார்.

covid-19 தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டு கொள்பவர்கள், மாவட்டம் - மாநிலம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு ஆதாரமாக அவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

2 டோஸ்களையும் போட்டு முடிப்பவர்களுக்கு, அனைத்துலகப் பயணங்கள் மேற்கொள்ளவதற்கான அனுமதி வழங்குவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக Tan Sri Muhyiddin கூறினார்.

நாட்டில் இதுவரை 75 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொண்டுள்ளனர்.

ஏறக்குறைய 7 லட்சம் பேர் அத்தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ள வேளை, அவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.

 


இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கும்!

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருந்த 2ஆம் கட்ட COVID-19 தடுப்பூசி திட்டம் முன்கூட்டியே ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து, அத்திட்டத்திற்கான பதிவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியிருப்பதாக அமைச்சு கூறியது.

வயதானவர்கள், நாள்பட்ட நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய அத்திட்டத்தில் இப்போதைக்கு 30 விழுக்காட்டினர் மட்டுமே பதிந்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.

covid-19 தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டு கொள்பவர்கள், மாவட்டம் - மாநிலம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

MySejahtera செயலி, அமைச்சின் அகப்பக்கம், hotline தொலைப்பேசி எண் ஆகியவை தவிர்த்து, மாவட்ட சுகாதார மையங்களுக்கு நேரடியாக சென்றும், அரசு சார்பற்ற இயக்கங்களின் உதவியுடன் 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்ளலாம் என அமைச்சு கூறியது.

மற்றொரு நிலவரத்தில், ரமலான் மாதத்திலும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முஸ்லீம்கள், நோன்பு துறப்புக்கு பின், இரவு நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அமைச்சு கூறியது.

 

COVID-19 தடுப்பூசி: இரு டோஸ்களையும் போட்டால் தான் முழுமை பெறும்!

COVID-19 தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கொரோனா தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் போட்டு முடிப்பதே சிறந்தது என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

covid-19 தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டு கொள்பவர்கள், மாவட்டம் - மாநிலம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

இரு டோஸ்களையும் போட்டு முடித்து, இரு வாரங்கள் ஆனப் பின்னரே, ஒருவர் COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார் என அர்த்தப்படும் என்கிறார், மலாயாப் பல்கலைக்கழக பொது சுகாதார நிபுணர் DR Victor Hoe.

"you are only considered fully vaccinated two weeks after the second dose in the two dose series like the Corminaty vaccine. The latest study has found that the Corminaty vaccine shows that the vaccine has 70% effective at preventing symptomatic and asymptomatic infection after the first dose. And this increases to 85% after the second dose.” 

உதாரணத்திற்கு Corminaty தடுப்பூசி; ஆகக் கடைசி ஆய்வின் படி, இவ்வகை தடுப்பூசியின் முதல் டோசைப் போட்டுக் கொள்வதால்அறிகுறிகள் கொண்ட மற்றும் அறவே அறிகுறிகள் காட்டாத கொரோனா தொற்றை 70 விழுக்காடு வரை தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதன் 2ஆம் டோசையும் போட்டுக் கொண்ட பின், அத்தொற்றை தடுக்கும் ஆற்றல் 85 விழுக்காடு வரை அதிகரிப்பதாக Dr Victor கூறுகின்றார்.

Pfizer-BioNTechகின் Corminaty தடுப்பூசிக்கான 2ஆவது டோஸ், 21 நாட்கள் இடைவெளிக்கு பிறகு போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.

இவ்வேளையில், தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படக்கூடிய சில உபாதைகள் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.

உடலில் செலுத்தப்படும் அத்தடுப்பு மருந்து, உள்ளேச் சென்று உண்மையிலேயே செயல்படத் தொடங்குகிறது என்பதற்கு அடையாளம் தான், அந்த உபாதைகள் என அவர் விளக்கினார்.

காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி மற்றும் தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும் Dr Victor கூறினார்.

 

கைலுக்குவது, ஆரத் தழுவிக் கொள்ளும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்! 

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளின் போது, ஒருவருக்கொருவர் கைலுக்குவது மற்றும்  ஆரத்தழுவிக் கொள்ளும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றார், பொது சுகாதார மருத்துவ நிபுணர் Dr Mohd Hazizi Mohd Hasani.

பொது மக்கள் அடிக்கடி பின்பற்ற தவறும் அல்லது மறந்துப் போகும் SOPகளில் அதுவும் ஒன்று என்றாரவர்.

அண்மைய காலமாக, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் திருமணப் புகைப்படங்களில் தனிமனித இடைவெளியை மக்கள் மீறி வருவதையும் காண முடிவதாக அவர் சொன்னார்.


SOP மீறல்: இருவர் மட்டுமே கைது!

COVID-19 தடுப்பு SOPகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அக்கறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது!

ஆகக் கடைசியாக, நேற்று முன்தினம் அந்த SOPகளை மீறிய குற்றத்திற்காக வெறும் இரண்டு பேர் மட்டுமே கைதாகியிருப்பது அதற்கு ஒரு நல்ல ஆதாரம் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yakoob கூறியுள்ளார்.

அவர்கள், முறையான அனுமதியின்றி மாநிலம் விட்டு மாநிலம் பயணித்த குற்றத்திற்காக பிடிப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலுக்கு வந்ததில் இருந்து பதிவாகியுள்ள முகக் குறைவான கைது எண்ணிக்கையாகவும் இது உள்ளது.

இவ்வேளையில், Op Benteng வாயிலாக, 50 கள்ளக் குடியேறிகளை கைது செய்துள்ள அதிகாரிகள், இரு படகுகள் மற்றும் ஐந்து தரை வழிப் போக்குவரத்து வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

முட்டைகளில் SE பாக்டீரியாக்கள் இல்லை!

நெகிரி செம்பிலான் Linggiயில் உள்ள பண்ணையொன்றில் இருந்து எடுக்கப்பட்ட முட்டை மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவை SE பாக்டீரியாக்களால் பாதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

covid-19 தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டு கொள்பவர்கள், மாவட்டம் - மாநிலம் கடக்க அனுமதிக்கப்படலாம்!

இவ்வேளையில், முட்டை கையிருப்பு மற்றும் அதன் பாதுகாப்பை உறுதிச் செய்ய, நாடு முழுவதும் உள்ள 276 பண்ணைகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக கால்நடை சேவைத் துறை கூறியது.

தாங்கள் வாங்கும் முட்டைகள் சுத்தமானதாகவும், உடையாமல் இருப்பதையும்  உறுதிச் செய்வதோடு, அவை முறையாக சமைக்கப்படுவதையும் உறுதிச் செய்யுமாறு அத்துறை பொது மக்களை அறிவுறுத்தியிருக்கின்றது.

முன்னதாக, Linggiயில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதியான முட்டைகளில்  SE பாக்டீரியாக்கள் பாதிப்பு இருப்பதாக கூறி, அவை அந்நாட்டுச் சந்தையில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில், அத்துறை விளக்கமளித்தது.


 

Google Malaysia-வில் அதிகம் தேடப்பட்ட தலைப்பு!

கடந்த மார்ச் மாதம், Google தேடல் இயந்திரம் வாயிலாக மலேசியர்கள் அதிகம் தேடிய முதல் 10 தலைப்புகளில்,  MyBayar Saman திட்டம் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அரச மலேசிய காவல் படை அறிமுகப்படுத்திய அப்புதிய செயலி வாயிலாக, குறிப்பிட்ட சாலைக் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது.

எனினும், ஏப்ரல் 11ஆம் தேதிக்கு முன்பாக செலுத்தப்படும் தண்டங்களுக்கு மட்டுமே அக்கழிவுச் சலுகை என PDRM அறிவித்திருந்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather