← Back to list
UNDI18 திட்டத்தை முதலில் கொண்டு வரலாம்!
Apr 01, 2021
நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் SPR-ருக்கு தடங்கல்கள் இருந்தால், UNDI18 திட்டத்தை முதலில் அமுலுக்கு கொண்டு வரலாம்!
தானியங்கி வாக்காளர் பதிவு முறையை வேண்டுமானால், அமுலாக்க சிக்கல்கள் கருதி, தாமதப்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சரவையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
SPR-ரின் கடந்த வார அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு அதுவே சிறந்த மற்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தீர்வாக இருக்கும் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் Datuk Seri Reezal Merican சொன்னார்.

18 வயதானவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க 2019ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி விட்ட நிலையில், தற்போது அதனை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது சரியல்ல என்றாரவர்.
அவரது கருத்தை ஆமோதித்த அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin-னும், தானியங்கி வாக்களர் பதிவை அமுல்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தால், தேர்தல் ஆணையம் முதலில் 18 வயதானவர்களை வாக்களிக்க அனுமதிக்கும் நடைமுறையை கொண்டு வரலாம் என கூறியுள்ளார்.
 
 
குறிப்பிட்ட தேதி கிடையாது!
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு, பொது மக்கள் பதிந்துக் கொள்வதற்கான கடைசி தேதி என்ற ஒன்று இப்போதைக்கு நிர்ணயிக்கப்படாது!

அவ்வாறு குறிப்பிட்ட தேதியை அறிவித்து மக்களை நெருக்கடிக்குள்ளாவதற்கு  பதிலாக, தடுப்பூசிக்கான அவசியம் பற்றி மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவசியம் என, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்வோரின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருப்பது குறித்து கேட்கப்பட்டபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் நேற்று ஆயிரத்து 482 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.
ஆக அதிகமான சம்பவங்கள், சிலாங்கூர், பினாங்கு மற்றும் சரவாக்கை உட்படுத்தியுள்ளன.
இன்னும் 14 ஆயிரத்து 604 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
மாநிலம் கடந்ததால் வந்த விளைவு!
பந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCOவை மீறி, காவல் துறையின் முறையான அனுமதியின்றி மாநிலம் விட்டு மாநிலம் பயணித்த மூன்று பெண்களுக்கு தலா ஐயாயிரம் ரிங்கிட் தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது.

தங்களது முகவரி Kelantanனில் தான் உள்ளது என்பதை அவர்கள் நிரூபிக்க தவறியிருப்பதை அடுத்து, அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
 
மலேசியாவின் மிக வயதான நபர்!
பினாங்கைச் சேர்ந்த 110 வயதாகும் A.அன்னம்மா, மலேசியாவின் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டு, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
வாரத்தில் ஒரு முறை விரதம் எடுப்பது, மூலிகை உணவுகளை அதிகம் உண்பதே அவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்; 
அன்னம்மா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather