← Back to list
AstraZeneca தடுப்பூசி பெறப்படுகிறது!
Mar 31, 2021
நாட்டில் இன்று புதிதாக ஆயிரத்து 482 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் மிக அதிகமாக 661 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்து பினாங்கிலும் சரவாக்கிலும் அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் ஏழுவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 272 ஆக உயர்ந்துள்ளது.
மலேசியா ஜூன் மாதம் தொடங்கி 6 லட்சம் டோஸ் AstraZeneca தடுப்பூசிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தடுப்பூசி கையிருப்புக்கான விநியோக அட்டவணையைத் தாங்கள் பெற்றிருப்பதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
AstraZeneca தடுப்பூசி கட்டங் கட்டமாகப் பெறப்படும் என தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில் AstraZeneca வகை தடுப்பூசி பயனீட்டுக்கு இந்தியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது, அரசாங்கத்தின் கொள்முதலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என Khairy சொன்னார்.
AstraZeneca தடுப்பூசி கையிருப்பை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்து அல்லாமல் தென் கொரியாவில் அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெறுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
“ While we are still waiting for the delivery details from COVAX for AstraZeneca to Malaysia, I don’t believe the ban from India will effect us because our vaccines come from SK bioscience.”
Covid-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று வரை நாடு முழுவதும் 6 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமான முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆக அதிகமாக சிலாங்கூரில் 67 ஆயிரத்துக்கும் கூடுதலான டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே 74 லட்சத்துக்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.
2021/2022 கல்வித் தவணைக்காக பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது திறன் பயிற்சிக் கல்லூரிகளில் நுழைய UPUOnline வழி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.
இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON97 பெட்ரோலின் விலை 2 சென் அதிகரித்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 52 சென்னுக்கு விற்கப்படும்.
RON95, டீசல் விலையில் மாற்றமில்லை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather