Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் இல்லை!

Mar 30, 2021


COVID-19 தடுப்பு மருந்துகளை அதன் விநியோகஸ்தரிடம் இருந்தே நேரடியாக வாங்கும் வாய்ப்பை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

ஆனால் அவ்வாய்ப்பை வழங்குவதால், வசதி உள்ளவர்கள், இம்மாதம் அல்லது அடுத்த மாதமே அத்தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என எண்ண முடியாது

ஆக சீக்கிரம் என்றால், இவ்வாண்டின் மூன்றாம் அல்லது 4ஆம் காலாண்டில் தான் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மருந்துகளை பெற முடியும்.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் இல்லை!

காரணம் உலகமே கொரோனா தடுப்பு மருந்துக்கன தேவையை எதிர்நோக்கியிருப்பதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.

வீடு வீடாகச் செல்லும் திட்டம் இல்லை.....

இவ்வேளையில், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக, வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அந்நடவடிக்கை மக்கள் மத்தியில் தேவையில்லா பயத்தை உண்டாக்கும் என்பதால், இப்போதைக்கு அத்திட்டம் தன்னார்வ அடிப்படையில் தொடரும் என்றாரவர்.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் இல்லை!

அதே சமயம், தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்திட்டத்திற்கான பதிவுகளை விரைவுப்படுத்த  அது உதவும் என முன்னதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin பரிந்துரைந்திருந்தார்.

இதன் வழி, குறைந்தது 80 விழுக்காட்டு மலேசியர்கள் அத்தடுப்பூசியை போட்டுக் கொண்டு, கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை பெறும் இலக்கை அடைய முடியும் என பிரதமர் கூறியுள்ளார்.

 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டு விட்டனர்!

நாடு முழுவதும் இதுவரை 72 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொண்டுள்ளனர்.

அவர்களில், 5 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

 

மலேசியாவின் தினசரி Covid-19 சம்பவங்கள் நிலவரம்!

கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு, நாட்டில் தினசரி COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை முதன் முறையாக ஆயிரத்திற்கு கீழ் அதாவது தொள்ளாயிரத்து 41க்கு குறைந்ததுள்ளது.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டம் இல்லை!

குறிப்பாக, சிலாங்கூரில் 219 புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

இன்னும் 14 ஆயிரத்து 219 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather