Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: 2-ஆம் கட்டம் ஏப்ரல் 19தில் தொடக்கம்!

Mar 29, 2021


covid-19: 2-ஆம் கட்டம் ஏப்ரல் 19தில் தொடக்கம்!

கிட்டதட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் இன்று மிகக் குறைவாக தொளாயிரத்து 41 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஆகக் கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி ஆயிரத்துக்கும் குறைவான சம்பவங்கள் பதிவானது.

நான்கு மாநிலங்களிலும் புத்ராஜெயா மற்றும் லாபுவானிலும் ஓரிலக்கத்தில் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

பெர்லிசில் புதிய சம்பவம் ஏதும் இல்லை.

மேலும் ஐவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது.

covid-19: 2-ஆம் கட்டம் ஏப்ரல் 19தில் தொடக்கம்!

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. 

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin இன்று அதனை அறிவித்தார்.

இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் MySejahtera செயலி, தொலைபேசி அழைப்பு, குறிஞ்செய்தி ஆகியவை மூலம் விவரம் தெரியப்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

"Kita akan mulakan fasa ini pada 19 April dan akan mula beri temujanji kepada mereka yang terpilih mulai 5 April ini.”

இதனிடையே இரண்டாம் கட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டவர்களில்  நேற்று வரை 20 லட்சம் பேர் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில், முதியவர்கள், நாட்பட்ட உடல் உபாதைகளால் அவதியுற்று வருவோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. 

covid-19: 2-ஆம் கட்டம் ஏப்ரல் 19தில் தொடக்கம்!

Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொள்வதற்கான இறுதி நாளை நிர்ணயிப்பது குறித்து அரசாங்கம் இன்னமும் பரிசீலித்து வருகிறது. 

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

அப்பரிந்துரையை அமல்படுத்துவதற்கான பொருத்தமான தருணம் பற்றி இன்னமும் விவாதித்து வருவதாக தடுப்பூசித் திட்ட ஒருங்கிணப்பாளருமான அவர் கூறினார்.

"Cadangan itu sedang dipertimbangkan dan jika kita dapati ia boleh memberi kesan positif kepada jumlah pendaftaran, maka kita akan buat pengumuman kelak." 

மலேசியர்களில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட்டும் இலக்கை விரைவுபடுத்த அண்மையில் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அப்பரிந்துரையை முன் வைத்திருந்தார்.  

covid-19: 2-ஆம் கட்டம் ஏப்ரல் 19தில் தொடக்கம்!

கடந்த வியாழக்கிழமையில் இருந்து நேற்று வரை MyBayar Saman செயலி மூலம் ஒரு கோடியே 90 லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதல் தொகையிலான சம்மன்கள் செலுத்தப்பட்டுள்ளதாக Bukit Aman தெரிவித்திருக்கிறது. 

இணையம் வாயிலாக சம்மன் தொகையைச் செலுத்த ஏதுவாக MyBayar Saman அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அச்செயலியைப் பயன்படுத்தி சம்மன் செலுத்துவோருக்கு 50 விழுக்காடு வரை கழிவும் வழங்கப்படுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather