← Back to list
71 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு!
Mar 28, 2021
நேற்றிரவு வரை நாடு முழுவதும் 71 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera செயலி வழி பதிந்து கொண்டுள்ளனர்.
சிலாங்கூரில் மிக அதிகமாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.
இவ்வேளையில் முன்களப் பணியாளர்களில் 5 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
உட்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு டோஸ் மட்டுமே தேவைப்படும் Covid-19 தடுப்பூசியைப் போட அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
உட்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது டோஸ் பெற்றுக் கொள்ள வருவது சிரமம் என்பது உள்ளிட்ட சில விஷயங்களைச் சீர் தூக்கிப் பார்த்து அவ்வாறு செய்யப்படலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தற்போது தேசியத் தடுப்பூசித் திட்டத்தில் இரு டோஸ்கள் தேவைப்படும் Pfitzer, Sinovac வகை தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் சீனத் தயாரிப்பிலான CanSino தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டும் செலுத்தினால் போதுமானது என்றும் அமைச்சு சுட்டிக் காட்டியது.
நாடு முழுவதும் உள்ள உயர்க்கல்விக் கழகங்களில் Covid-19 தொடர்பான 24 மணி நேர நடவடிக்கை அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அக்கிருமித் தொற்று சம்பவங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்க ஏதுவாக அந்த அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு கூறியது.
Covid-19 நிலவரம் தொடர்பில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவலை கொள்வதை தாங்கள் அறிந்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.
15 ஆவது பொதுத் தேர்தலில் Bersatuவுடன் கூட்டணி வைத்து ஒத்துழைப்பது அம்னோவைப் பொருத்தது.
Bersatu தலைவர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு கூறியிருக்கிறார்.
2020 அம்னோ பொதுப் பேரவையின் இறுதி நாளான இன்று, 15 ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி Bersatuவுடன் கூட்டணி சேருமா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படும் கோழி முட்டைகள் உண்பதற்கு பாதுகாப்பானவை என விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல் அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தைகளில் காணப்படும் முட்டைகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அவற்றில் கிருமிகள் ஏதும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அது விளக்கியது.
சிலாங்கூரில் சில கோழிப் பண்ணைகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
பாலர் பள்ளிகளில் மாணவர்கள் துன்புறுத்தல்களுக்கும் சித்ரவதைக்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதிச் செய்ய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தர செயல்பாட்டு நடைமுறையை மறு ஆய்வு செய்யவிருக்கிறது.
அண்மையில் பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர் சினமடைந்து தமது மாணவனைத் தூக்கி வீசும் காணொளி வெளியானதை அடுத்து அமைச்சு அவ்வாறு செய்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather