Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

89 இடங்களில் தண்ணீர் விநியோக தடை!

Mar 25, 2021


Gombak, KL, Petaling, கிள்ளான் மற்றும் Shah Alam-மில், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமையும், ஏப்ரல் ஆறாம் தேதியும், குறைந்தது 68 மணி நேரங்களுக்கு அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.

89 இடங்களில் தண்ணீர் விநியோக தடை!

அத்தண்ணீர் விநியோகத் தடை மொத்தமாக 89 பகுதிகளை உட்படுத்தியிருப்பதாக Syabas அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சிலாங்கூரில் உள்ள சில முக்கிய தண்ணீர் ஆலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதே அதற்கு காரணம் என்றும் Syabas தெரிவித்துள்ளது.

 

அந்நிய நாட்டு வீட்டுப் பணிப் பெண்களுக்கான தடுப்பூசி!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், அந்நிய நாட்டு வீட்டுப் பணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுடைவர்கள் என, தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.

89 இடங்களில் தண்ணீர் விநியோக தடை!

வீட்டுப் பணிப் பெண்களை, அவர்களது முதலாளிகள், MySejahtera செயலி வாயிலாக, தங்களைச் சார்ந்தவர்கள் அதாவது dependent பகுதியில் பதிவு செய்யலாம் என Khairy தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், AstraZeneca COVID-19 தடுப்பூசி மலேசியாவில் பயன்படுத்த பாதுகாப்பானதே என சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்திருக்கிறது.

அத்தடுப்பூசி போட்டுக் கொண்டதால், மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனிலும், ரத்த உறைவு பிரச்னையை அத்தடுப்பூசியுடன் தொடர்புப்படுத்தக்கூடிய எந்தவொரு வலுவான ஆதாரங்களும் இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.

 

கழிவுச் சலுகை!

இன்று கொண்டாடப்படும் தேசிய காவல் படை தினத்தையொட்டி, ஏப்ரல் 11ஆம் தேதி வரை போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டங்களுக்கு கழிவுச் சலுகை வழங்கப்படுகிறது.

அக்காலக்கட்டத்திற்குள் அபராதத்தை செலுத்தினால் வாகனமோட்டிகள் 50 விழுக்காட்டு கழிவைப் பெறலாம்; ஆனால், MyBayar செயலி வாயிலாக மட்டுமே அவர்கள் அத்தொகையை செலுத்த முடியும்.

"e-payment" முறையை மக்கள் பயன்படுத்துவதை இந்த கழிவுச் சலுகை இயக்கம் ஊக்குவிக்கின்றது.

 

வாரிய இயக்குநர்களாக பெண்கள்!

நாட்டில் PLC பட்டியலில் உள்ள முதல் நூறு நிறுவனங்களில், வாரிய இயக்குநர்களாக பதவி வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது 25 புள்ளி 8 விழுக்காடாக இருக்கின்றது!

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவ்வெண்ணிக்கை 82 விழுக்காடு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather