← Back to list
Sinovac தடுப்பூசி பாதுகாப்பானது!
Mar 18, 2021
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக ஆயிரத்து 213 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆயிரத்து 503 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டு பூரண நலமடைந்துள்ளனர்.
புதிதாக மேலும் மூவர் பலியாகியிருப்பதால், மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது.
சீனத் தயாரிப்பிலான Sinovac தடுப்பூசி பாதுகாப்பானது; பலனளிக்க வல்லது என அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருக்கிறது.
உலகம் முழுவதும் Covid-19னுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 15 விழுக்காடு இவ்வகை தடுப்பூசியே என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
“Walaupun negara kita baru saja berikan suntikan vaksin Sinovac ini tetapi sehingga 15 Mac lebih daripada 15% dos global yang diberikan adalah Sinovac, ini terbukti menunjukkan bahawa banyak lagi negara lain yang turut mengakui tahap keselamatan, kebersanan, dan kestabilan untuk diambil dan diberikan kepada penduduk mereka”
தேசியத் தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளருமான Khairy இன்று Sinovac தடுப்பூசியின் முதல் டோசைப் போட்டுக் கொண்டார்.
நாட்டில் அவ்வகை தடுப்பூசி பெற்ற முதல் நபராகவும் அவர் விளங்குகிறார்.
மற்றொரு நிலவரத்தில், Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera செயலி வாயிலாக தந்தை, தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைப் பதிவு செய்யும் புதிய அம்சம் நாளை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் சொன்னார்.
சில மேம்பாடுகளைச் செய்ய ஏதுவாக அப்புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவது இதற்கு முன் ஒத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட தாதி ஒருவர் மரணமடைந்திருப்பதாக பரவியுள்ள தகவல் குறித்து விசாரிக்கப்படுவதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் The Starரிடம் தெரிவித்திருக்கிறார்.
அத்தாதியின் மரணம் தொடர்பில் கெடா காவல் துறை புகாரொன்றைப் பெற்றிருப்பதாக அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், அத்தாதிக்கு களைப்பும் சுவாசப் பிரச்னையும் ஏற்பட்டதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனமோட்டும் போது அடர்ந்த நிறத்திலான மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால் சம்மன் வெளியிடப்படும் என பரவியுள்ள தகவலை PDRM மறுத்திருக்கிறது.
வாகனமோட்டும் போது அடர்ந்த நிற மூக்குக் கண்ணாடி அணிவது குற்றம் என்று சட்டத்தில் இல்லை என அது தெளிவுபடுத்தியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather