← Back to list
தடுப்பூசி வாங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடரும்!
Mar 15, 2021
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆயிரத்து 208 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய சம்பவங்களை விட அதிகமாக ஆயிரத்து 973 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும் மூவர் Covid-19னுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி வாங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடரும்!
MySejahtera செயலி வாயிலாக Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டுள்ளவர்களில் சுமார் 14 லட்சம் பேர் இன்னும் தேவையான விவரங்களை வழங்கவில்லை.
எனவே தடுப்பூசிப் போட்டுக் கொள்ளத் தேவையான விவரங்களை முழுமைப்படுத்துமாறு அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
MySejahteraவில் கொடுக்கப்படும் முகவரியின் அடிப்படையிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அழைக்கப்படுவர் என்பதால், அண்மைய முகவரியைக் கொடுப்பது மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
“Alamat ini penting untuk dimasukkan sebab kita akan memberi temujanji di pusat permberian vaksin yang paling berhampiran dengan alamat yang anda memasuki ke dalam MySejahtera, itulah sebab kita minta alamat, kita tidak mengambil alamat IC sebab ramai tidak duduk di alamat yang ada di dalam kad pengenalan”
இதனிடையே, AstraZaneca தயாரிப்பிலான COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுவதாக இதுவரை ஆதாரம் ஏதும் இல்லை.
எனவே தற்போதைக்கு அத்தடுப்பூசியை வாங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடரும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்திருக்கிறார்.
AstraZaneca தடுப்பூசியைப் போடுவதால் ரத்தம் உறைவதாக அனைத்துலக ஊடகங்கள் கூறியிருப்பதை அடுத்து தடுப்பூசித் திட்ட ஒருங்கினைப்பாளருமான Khairy அவ்வாறு சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், Sinovac வகை தடுப்பூசி வரும் வியாழக்கிழமையில் இருந்து Rembau மருத்துவமனையில் பயன்படுத்தப்படுகிறது.
Khairy அதனை முதல் நபராகப் போட்டுக் கொள்ளவிருக்கிறார்.
தேசிய Covid-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தனியார் சுகாதார நிலையங்கள் அல்லது மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது.
அக்கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்.
109 பேருக்கு தண்டம்!
ஜொகூர் Muarரில் உள்ள மனமகிழ் மையம் ஒன்றில், COVID-19 தடுப்பு SOPகளை மீறியதற்காக 109 பேருக்கு மொத்தமாக 11 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த அண்மையில் அரசாங்கம் அறிவித்த அவசரக் காலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மிகப் பெரிய தண்டமாகும்.
சம்பந்தப்பட்ட மனமகிழ் மையம் ஏற்கனவே இரு முறை சோதனையிடப்பட்டு, அதன் உரிமமும் ரத்துச் செய்யப்பட்டு விட்டது.
ஆனால், அதன் நடத்துநர் விதிமுறை மீறி அம்மையத்தை செயல்படுத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
காதல் ஜோடிக்கு தண்டமா?
கோலாலம்பூரில் உணவகமொன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது, தர செயல்பாட்டு நடைமுறையை மீறியதாகக் கூறி காதல் ஜோடியொன்றுக்கு பத்தாயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை Bukit Aman மறுத்துள்ளது.
உண்மையில் அந்த தண்டத் தொகை வேறொரு அரசாங்க நிறுவன அதிகாரிகளால் அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த அவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஜோடியிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது.
கோழி முட்டைகள் கையிருப்பில் பிரச்னையில்லை!
SE பாக்டீரியா காரணமாக உள்நாட்டில் கோழி முட்டை கையிருப்பு பாதிக்கப்படவில்லை.
சிங்கப்பூருக்கு கோழி முட்டைகளை இறக்குமதி செய்யும் மலேசியாவின் ஒரு நிறுவனத்தை மட்டுமே அச்சம்பவம் உட்படுத்தியிருப்பதாக என கால்நடை சேவைத் துறை தெளிவுப்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நச்சுயிரிக்களால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அதன் கோழி முட்டைகள் குறித்து சுகாதார அமைச்சு தொடர் விசாரணை மேற்கொண்டிருக்கிறது.
இதுவரை பரிசோதிக்கப்பட்ட அந்நிறுவனத்தின் 370 கோழி முட்டை மாதிரிகளில், இரண்டு முட்டைகளில் மட்டுமே அந்த நச்சுயிரிக்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
10 ரிங்கிட் கழிவு!
அடுத்த மாதம் தொடங்கும் Cuti-cuti Malaysia இயக்கத்தை முன்னிட்டு, தனது ETS ரயில் சேவைகளுக்கு, 10 ரிங்கிட் கழிவு வழங்கப்படுவதாக KTMB அறிவித்துள்ளது.
ஜூன் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் அந்த இயக்கத்தின் வாயிலாக, உள்ளூரில், அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது விடுமுறையை கழிக்க பொது மக்கள் முன்கூட்டியே திட்டமிடலாம் என KTMB தெரிவித்தது.
டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather