Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Inniki Enna Kathe

Listen to Kogu with brand new topics which will benefit you from Monday to Friday (1pm - 4pm)

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Inniki Enna Kathe Current Show

Inniki Enna Kathe

Listen to Kogu with brand new topics which will benefit you from Monday to Friday (1pm - 4pm)

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம்: இன்னும் அதிகமானோர் பதிந்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்!

Mar 14, 2021


COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு இன்னும் அதிகமான மலேசியர்கள் முன்வந்து பதிந்துக் கொள்வதை ஊக்குவிக்க, சமூகத் தலைவர்கள் பங்காற்ற வேண்டும் என மலேசிய மருத்துவச் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சமயத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், சமுதாயத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள், கொரோனா பெருந்தொற்றை வேரறுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேரளவிலான திட்டம் வெற்றிப் பெற தங்கள் பங்கினை ஆற்ற முன்வர வேண்டும் என அச்சங்கம் கருதுகின்றது.

தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே, மலேசிய மக்கள் தொகையில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட்டு, கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் அரசாங்கத்தின் இலக்கு நிறைவேறும் என அச்சங்கம் தெரிவித்தது.

இயன்ற வரை இவ்வாண்டு இறுதிக்குள் அந்த இலக்கை அடைய வேண்டும் என MMA கூறியது.

ஆகக் கடைசி நிலவரப்படி, 53 லட்சத்திற்கும் அதிகமானோர் அதாவது 22 புள்ளி ஒரு விழுக்காட்டினர் MySejahtera செயலி வாயிலாக COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்துக் கொண்டுள்ளனர்.

அதிகமான பதிவுகள் செய்யப்பட்ட மாநிலமாக சிலாங்கூரும், அதற்கடுத்த நிலைகளில், ஜொகூர், கோலாலம்பூர், சரவாக் ஆகியவையும் இருக்கின்றன.

covid-19 தேசிய தடுப்பூசி திட்டம்: இன்னும் அதிகமானோர் பதிந்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்!

மற்றொரு நிலவரத்தில், COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், ஏப்ரலில் தொடங்கவுள்ள 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் ஏறக்குறைய 80 ஆயிரம் பேரை உட்படுத்தியிருக்கும்.

அவர்களில் ஏறக்குறைய ஈராயிரத்திற்கும் அதிகமானோர் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் என  மகளிர், சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது.

இவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்ய, அமைச்சு தற்போது உரிய தரப்பினருடன் ஒத்துழைத்து வருகின்றது.

இந்த 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ், முதியோர், நாள்பட்ட நோய் கண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

 

Ismail Sabri: RM10,000 தண்டம் அனைத்து MCO வகைகளுக்கும் உட்பட்டது!

COVID-19 நோய் தடுப்பு SOP-களை மீறியதால் விதிக்கப்படும் 10 ஆயிரம் ரிங்கிட் தண்டம் அனைத்து வகையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளையும்  உட்படுத்தியிருக்கின்றது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO , மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை RMCO விதிக்கப்பட்ட பகுதிகள் அதிலடங்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

covid-19 தேசிய தடுப்பூசி திட்டம்: இன்னும் அதிகமானோர் பதிந்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்!

கொரோனா தடுப்பு SOPகளை மீண்டும் மீண்டும் மீறுபவர்கள் அல்லது SOPகளை உட்படுத்தி, கடுமையான குற்றங்கள் செய்பவர்களுக்கே அந்த கூடியப்பட்ச தண்டம் விதிக்கப்படும் என Putrajaya முன்னதாக கூறியிருந்தது.

எனினும், முதன் முறையாக அத்தண்டம் விதிக்கப்படுவோர், அத்தொகையை குறைக்க கோரி மாவட்ட சுகாதார அலுவலகங்களில் முறையீடு செய்யலாம்.

அபராதத் தொகையை மேலும் குறைக்க விரும்பினால், அவர்கள் அடுத்தக் கட்டமாக நீதிமன்றத்தை நாடலாம் என அரசாங்கம் கூறியுள்ளது.

 

மாநிலங்கள் கடக்க இப்போது அனுமதி இல்லை!

நாட்டில் அண்மைய காலமாக தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும், மாநிலங்கள் கடந்து பயணிக்க இன்னும் நேரம் வரவில்லை என சுகாதார அமைச்சு கூறுகின்றது.

மாநில எல்லைகளை கடந்ததன் விளைவாக நாட்டில் பரவியுள்ள சில clusterகளின் அடிப்படையில் பார்க்கும் போது, கொரோனா பெருந்தொற்றின் ஆபத்து இன்னும் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது என அமைச்சு தெரிவித்தது.

covid-19 தேசிய தடுப்பூசி திட்டம்: இன்னும் அதிகமானோர் பதிந்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்!

ஆகக் கடைசியாக, திரங்கானுவில் அடையாளம் காணப்பட்டுள்ள Bukit Bayas cluster அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என அமைச்சு கூறியது.

அந்த clusterரின் கீழ் 5 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 48 பேருக்கு COVID-19 தொற்று பீடித்திருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது..

இப்போதைக்கு அவசர தேவைகளுக்காக காவல் துறை அனுமதியுடன்  மாநிலங்கள் கடந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் COVID-19 SOPகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்பதை அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us