← Back to list
Covid-19-னின் சீற்றம் குறைந்து கொண்டே போகிறது!
Mar 12, 2021
நாட்டில் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்துக்கும் கீழ் உள்ளது.
இன்று புதிதாக ஆயிரத்து 575 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈராயிரத்து 42 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
மேலும் மூவர் உயிரிழந்திருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.
-----
சமூக மருந்தக உறுப்பினர்கள் Covid-19 தடுப்பூசி பெறுவோரில் முதல் கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சில மருந்தகர்கள் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
அவ்வகையில் நாடு முழுவதும் சுமார் நாலாயிரம் மருந்தகர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
-----
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை COVID-19 தடுப்பூசி போட்டு விட்டனர்.
இவ்வேளையில், இதுவரை 52 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera வழி பதிந்து கொண்டுள்ளனர்.
-----
Covid-19 தொற்று மற்றும் அவசர கால நிலை குறித்து போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அல்லது அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம் என பிரதமர் துறையின் சட்டப் பிரிவு அமைச்சர் Datuk Takiyuddin Hassan தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், Covid-19 தொடர்பான பொய்ச் செய்திகள் குறித்து தாங்கள் 50க்கும் அதிகமான சம்பவங்களையும் காவல் துறை 200க்கும்
மேற்பட்ட சம்பவங்களையும் விசாரித்திருப்பதாக தொடர்பு, பல்லூடக அமைச்சு கூறியுள்ளது.
-----
Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பட்டியல் வரிசைப்படி பின்பற்றப்படவில்லை எனக் கூறிய நபரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது விசாரணையை முழுமைப்படுத்தவே.
சம்பந்தப்பட்ட நபரைக் பயமுறுத்தவே அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டத்தாகக் கூறப்படுவது உண்மையில்லை என PDRM தெளிவுபடுத்தியது.
-----
மற்றொரு நிலவரத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பட்டியல் வரிசைப்படி பின்பற்றப்படவில்லை எனக் கூறி தகவல் தருவோரைத் தண்டிக்க வேண்டாம் என காவல் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்விவகாரம் குறித்து தம்மிடம் நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி தகவல் தருவோரைப் பற்றி தாம் எந்த விவரமும் வெளியிட்டதில்லை என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather