← Back to list
இழப்பீடு திட்டம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும்!
Mar 11, 2021
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அதில் ஆக அதிகமான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை உள்ளடக்கிய மாநிலங்களாக, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகியவை திகழ்கின்றன.
MySejahtera செயலி வழி தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தை தாண்டியிருக்கிறது.
இவ்வேளையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்போசி போட்டுக் கொண்டப் பின், மோசமான பக்க விளைவுகளை எதிர்நோக்குபவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்திற்கும் குறைவாக உள்ளது!
நாட்டில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக, ஈராயிரத்திற்கும் கீழ் பதிவாகியிருக்கின்றது.
நேற்று ஆயிரத்து 448 கொரோனா சம்பவங்கள் பதிவாகின; அதில் ஆக அதிகமாக 561 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி, ஏறக்குறைய 18 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருப்பி அனுப்பப்பட்டன!
ஏறக்குறைய 585 சேதமடைந்த COVID-19 தடுப்பு மருந்து குப்பிகளை (vials), மலேசியா அதன் தயாரிப்பு நிறுவனமான Pfizerரிடமே திருப்பி அனுப்பியிருக்கின்றது.
பெல்ஜியத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து அவை மலேசியாவுக்கு அனுப்படும் போது, சரியான தட்டவெட்பநிலையில் அவை பத்திரப்படுத்தி வைக்கப்படவில்லை என்பதே அதற்கு காரணம் என, அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather